;
Athirady Tamil News

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டு பிரிவால் வவுனியாவில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு..!! (படங்கள்)

0

புலம்பெயர் உறவுகளின் பங்களிப்புடன் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் கல்வி மேம்பாட்டு பிரிவால் வவுனியாவில் இன்று துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

ஜேர்மன் பேர்லினில் உள்ள தமிழ் இளையோர்களின் நிதிப்பங்களிப்புடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட கல்வி மேம்பாட்டுப்பிரிவினால் வவுனியா தோணிக்கல்லில் வசிக்கும் ஆறு குடும்பங்களின் பிள்ளைகளுக்கே துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் முன்னணியின் நகரசபை உறுப்பினர் மதியழகன், முன்னணியின் வவுனியா தெற்கு தமிழ்பிரதேச சபை உறுப்பினர் கணேசலிங்கம், வவுனியா மாவட்ட முன்னணியின் அமைப்பாளர் மயூரசர்மா, சர்வதேச இந்து இளைஞர் பேரவைத்தலைவர் சிவகஜன்,

முன்னணியின் பொருளாளர் கேசவன் மற்றும் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் வேள்நாகன், சுரேஸ் இந்த உதவிக்கான வேண்டுகோளை விடுத்த தோணிக்கல் செயற்பாட்டாளர் விக்னா ஆகியோரும் கலந்து கொண்டு மேற்படி துவிச்சக்கர வண்டிகளை வழங்கிவைத்தார்கள்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + ten =

*