;
Athirady Tamil News

பாராளுமன்றம் மீண்டும் 27 ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு..!! (வீடியோ)

0

பாராளுமன்றம் மீண்டும் நவம்பர் 27 ஆம் திகதி பிற்பகல் 1 மணி வரை பிற்போடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (23) காலை கூடியது.

பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

பாராளுமன்றத்திற்கு வருகை தரும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலயே பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

பாராளுமன்ற அமர்வின் போது கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கப்பட்டதுடன், தெரிவிக் குழுவில் அங்கம் வகிப்போர் தொடர்பிலும் சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.

பின்னர் பாராளுமன்றில் இடம்பெறும் தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாது வௌிநடப்பு செய்தனர்.

நிறைவில் பாராளுமன்றத்தில் தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்புக்கு ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டன.

அதனை தொடரந்து மீண்டும் பாராளுமன்றம் நவம்பர் 27 ஆம் திகதி பிற்பகல் 1 மணி பிற்போடப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + eleven =

*