;
Athirady Tamil News

சிறைக் கைதி காணாமல் போனமை குறித்து விசாரணைகள் ஆரம்பம்..!!

0

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.

உதவி சிறைச்சாலை அத்தியட்சகரின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய கூறினார்.

போதைப் பொருள் கடத்தல் சம்பந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த கைதி களுத்துறை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை சிறைச்சாலை அதிகாரிகள் என்று கூறிய சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் சீருடையில் வந்த குழுவொன்றால் குறித்த கைதி அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த கைதியை மீண்டும் கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புள்ள அதிகாரிகள் இருந்தால் அவர்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதாக துஷார உபுல்தெனிய கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + fourteen =

*