;
Athirady Tamil News

சிறப்பாக இடம்பெற்ற விபுலானந்தா கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் விபுலம் மலர் வெளியீடும்..!! (படங்கள்)

0

விபுலானந்தாக் கல்லுரியின் 2018 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவும் விபுலம் மலர் வெளியீடும் சிறப்பாக இடம்பெற்றது.

இன்று பாடசாலை அதிபர் பொன். சிவநாதன் அவர்களின் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற பரீட்சைகளில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும், பொது பரீட்சைகளில் திறமை சித்திகளை பெற்ற மாணவர்களுக்கும் கௌரவிப்பு வழங்கப்பட்டது. அத்துடன் திறமை சித்திபெற்ற மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் சான்றுதல்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அத்துடன் பாடசாலையின் சாதனைகளை வெளிப்படுத்தும் விபுலம் மலரினை பாடசாலை அதிபரிடம் இருந்து மேலதிக அரசாங்க அதிபர் பெற்று அதனை வெளியிட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா தெற்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர் எல். அமிர்தலிங்கம், கோட்டக் கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா, விரிவுரையாளர் நவநீதன், ஓய்வு நிலை அதிபர் க.விவேகானந்தராசா, அயல் பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு அங்கத்தவர்கள், பாடசாலை பழையமாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பழையமாணவர்கள், பெற்றேர்கள், நலன் விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 16 =

*