;
Athirady Tamil News

திருகோணமலையில் சூது விளையாடிய நால்வர் கைது..!!

0

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பணத்திற்காக சூது விளையாடிய 4 பேரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கப்பல்துறை ஆறாம் கட்டை பகுதியை சேர்ந்த ஹூசையின் முகம்மது ரிஸ்மி (32 வயது), கந்தையா வீதி வரோதய நகர் பகுதியை சேர்ந்த ஜெயராமன் வசந்தன் (32 வயது), பாலையூற்று முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த சாகுல் ஹமீட் (42 வயது) மற்றும் செல்வநாயகபுரம் விநாயகர் வீதியைச் சேர்ந்த கே.ஜெயராஜ் (29 வயது) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது பணமும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் சந்தேகநபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை எதிர்வரும் 28ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு சந்தேகநபர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 9 =

*