;
Athirady Tamil News

வவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!! (படங்கள்)

0

அமைதி கல்வித்திட்டம் நிறைவு செய்த வவுனியா வேப்பங்குளத்தில் அமைந்துள்ள அன்பகம் சிறுவர் இல்லத்து சிறுமிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்வித்திட்டத்தின் ஆசிரியர் திருமதி. யோ.ஜெயந்தி தலைமையில் இன்று (25) அன்பகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிஸ்கந்தராஜா சாந்தி கலந்துகொண்டிருந்தார்.

ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாலைபோட்டு வரவேற்கப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

சமாதான பாராட்டு, உள்வலிமை சுய விழிப்புணர்வு, தெளிவாக புரிந்துகொள்ளல், கண்ணியமான தேர்வு, நம்பிக்கையூட்டும் சடங்குகள் ஆகிய பாடத்திட்டங்களை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் மாணவிகளால் கல்வித்திடம் தொடர்பாக விளக்கவுரைகள் வழங்கப்பட்டது.

அகில அலங்கை சமாதான நீதவான் செல்வி எஸ். இராஜலட்சுமி, இந்து சிறுவர் இல்ல பொறுப்பாளர் கு.ஜெயராணி, ஓய்வுநிலை கிராம அலுவலர் திருமதி கு.லிங்கநாதன், அமைதி கல்வித்திட்ட இணைப்பாளர் ப.விமலநாத சர்மா, எஸ்.பாலசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 19 =

*