;
Athirady Tamil News

2 ஆவது இன்னிங்ஸ் நிறைவில் இங்கிலாந்து அணி 230 ஓட்டங்கள்..!!

0

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 230 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

கொழும்பு எஸ். எஸ். சி மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 336 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதன்படி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்றக்கொண்டது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் நிறைவில் 96 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்ததுடன் இலங்கைக்கு இரண்டாவது இன்னிங்ஸின் வெற்றியிலக்காக 327 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 17 =

*