;
Athirady Tamil News

42 ஓட்டங்களால் இலங்கையை வென்று தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து..!!

0

இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் 3 க்கு 0 என்ற அடிப்படையில் டெஸ்ட் தொடரையும் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 336 ஓட்டங்களும், இலங்கை அணி 240 ஓட்டங்களும் எடுத்தன.

96 ஓட்டங்கள் முன்னிலையுடன் 3 வது நாளான நேற்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 2 வது இன்னிங்சில் 69.5 ஓவர்களில் 230 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 327 ஓட்டங்கள் இலக்கை நோக்கி 2 வது இன்னிங்சை துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இன்றைய நாளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 284 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதனால் இங்கிலாந்து அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 3 க்கு 0 என்ற அடிப்படையில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 19 =

*