;
Athirady Tamil News

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது..!!

0

பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சற்று முன்னர் கூடியது.

பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

பாராளுமன்றத்திற்கு வருகை தரும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலயே பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

(பின்னிணைப்பு – 1.15 pm)

ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளனர்.

இதனடிப்படையில் ஆளும் கட்சி உறுப்பினர்களின் ஆசனங்கள் பெரும்பாலும் வெறிச்சேடி காணப்படுகிறது. (பின்னிணைப்பு – 1.30 pm)

பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − eighteen =

*