;
Athirady Tamil News

இருவேறு விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி..!!

0

இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேவல்வத்த வீதியின் துரேகந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (26) மாலை இரத்தினபுரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் பின்னால் அமர்ந்து சென்ற குறித்த பெண் முச்சக்கர வண்டியில் இருந்து கீழே விழுந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த குறித்த பெண் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி, கல்லேல்ல பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எத்கந்துர, குருசிங்க வீதியின் புல்லுமலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (26) மாலை 6.20 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்த துவிச்சக்கர வண்டியை மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த முதியவர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

எத்கந்துர பகுதியை சேர்ந்த 75 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 9 =

*