;
Athirady Tamil News

சட்டவிரோத மனித கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்..!!

0

சட்டவிரோத மனித கடத்தலை தடுப்பது சம்பந்தமாக பெற்றுள்ள உயர் நிலைமையினை தொடர்ந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மனித செயல்திறன் படையணிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது சம்பந்தமாக அமைக்கப்பட்டுள்ள படையணிக்கும், அமைச்சருக்கும் இடையில் நேற்று (26) நீதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டில் பெற்றுக் கொண்டுள்ள உயர் நிலையை பேணிச் செல்வதற்கு அனைத்து நிறுவனங்களும் அவதானம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

2019ம் மார்ச் 31ம் திகதியாகும் போது இலங்கையினால் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு வழங்க வேண்டிய சட்டவிரோத மனித கடத்தல் சம்பந்தமான முன்னேற்ற அறிக்கை தொடர்பில் இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 5 =

*