;
Athirady Tamil News

மாத்தறை மாணவன் உயிரிழப்பு; மூன்றாவது சந்தேகநபரும் விளக்கமறியலில்..!!

0

மாத்தறையில் மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 03ம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாத்தறை, எலவில்ல பிரதேசத்தில் கடந்த 24 ஆம் திகதி மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

குறித்த மாணவன் மாலைநேர வகுப்பு ஒன்றுக்கு அருகில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தான்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 16 =

*