வவுனியாவில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு..!! (படங்கள்)
தேசியவாசிப்பு மாத பரிசளிப்பு விழா வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இன்று (28) நடைபெற்றது.
வவுனியா நகரசபை கலாசாரமண்டபத்தில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்வில் தேசிய வாசிப்பு மாத சிறப்பிதழ் ஒன்றும் தமிழ் மணி அகளங்கனால் வெளியீடு செய்து வைக்கப்பட்டதுடன் முதல் பிரதியை வவுனியா தேசியகல்வியற்கல்லூரி பீடாதிபதி சு.சுவர்ணராஜா பெற்றுக்கொண்டிருந்தார்.
நிகழ்வில் மாலை அணிவிக்கபட்டு விருந்தினர்கள் பவனியாக அழைத்துவரபட்டதுடன் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன், சர்வமத குருக்களின் ஆசியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.
இன நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் முகமாக வரவேற்பு நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நகரசபை உறுப்பினர்களுக்கு தேசிய வாசிப்பு மாத சிறப்பிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் பொதுநூலகத்தால் நடாத்தபட்டவாசிப்பு மாதபோட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு அதிதிகளால், பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கபட்டதுடன் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.
விருந்தினர்களாக யாழ்பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் ரி.மங்களேஸ்வரன், வலயக்கல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், வவுனியா தேசியகல்வியற்கல்லூரி பீடாதிபதி சு.சுவர்ணராஜா,உபநகரபிதா சு.குமாரசாமி, நகரசபை செயலாளர் இ. தயாபரன், நகரசபை உறுப்பினர்கள், மற்றும் பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா