கஜா புயல் நிவாரணப் பொருட்களுக்கு ஏர் இந்தியா விமானங்களில் சரக்கு கட்டணம் ரத்து..!!

சமீபத்தில் கோரத்தாண்டவமாடிய கஜா புயலால் பெரிய பேரிடரை சந்தித்துள்ள பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை தமிழக அரசுக்கு சொந்தமான பஸ்களில் இலவசமாக கொண்டு செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதேபோல், ரெயில்கள் மூலமாக அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என ரெயில்வேதுறை அமைச்சம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து கஜா புயலால் பாதிக்கட்ட தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு ஏர் இந்தியா விமானங்களில் சரக்கு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு இன்று அறிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் நிவாரணப் பொருட்களை இங்கிருந்து சென்னைக்கு அனுப்பி வைப்பதற்கான ஒப்புதல் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்பார்வையிடுவார்கள் என்றும் சுரேஷ் பிரபு குறிப்பிட்டுள்ளார்.