;
Athirady Tamil News

பாஜக இல்லாத இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கும்- மம்தா பானர்ஜி..!!

0

மேற்கு வங்காள மாநிலம் பலராம்பூரில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி பேசியதாவது:-

மாநில கவர்னர் அலுவலகம் முதல் பிரதமர் அலுவலகம் வரை அனைத்திலும் தனது ஆதரவாளர்களை பா.ஜனதா பணியில் நியமித்துள்ளது. எனவே இந்தியாவை விட்டு பா.ஜனதா வெளியேற வேண்டும். பா.ஜனதா இல்லாத இந்தியா சிறப்பாக இருக்கும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த தேர்தலில் அந்த கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது.

மத்தியபிரதேச தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி உதவியுடன் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தடம் பதிக்க முயற்சிக்கிறது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் பா.ஜனதாவுக்காக தங்களது நிறத்தை மாற்றி வருகின்றனர்.

வெளியில் பா.ஜனதாவினராகவும் உள்ளே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினராகவும் அவர்கள் இருக்கிறார்கள்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தாவில் ஜனவரி மாதம் நடத்தப்பட உள்ள பேரணியில் பல்வேறு எதிர்க்கட்சிகள் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளன.

அந்த பேரணியில் எதிர்கட்சி தலைவர்கள் சந்திரபாபு நாயுடு, ஹர்திக் படேல், தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ், மு.க.ஸ்டாலின், பரூக் அப்துல்லா, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 3 =

*