வெளிநாட்டு நாணயத்தாள்களை திருடிய பெண்கள் இருவர் உட்பட மூவர் கைது..!!

சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை திருடிய பெண்கள் இருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலபிட்டிய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றனர்.
மஸ்கெலிய பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 1300 யூரோக்கள், 1100 அமெரிக்க டொலர்கள் மற்றும் சுமார் ஒரு கோடிக்கும் அதிகாமான இலங்கை ரூபாய்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதவிர சந்தேக நபர்களிடம் இருந்து 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன் நம்பவம் தொடர்பில் பலபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.