;
Athirady Tamil News

அதிக வேகத்தின் காரணமாக பறிபோன உயிர்..!!

0

பத்தேகம, குருசிங்க வீதியின் தெல்கஹ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (29) காலை 5 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு விலகி அருகில் கட்டிடத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பத்தேகம, வவுலாகொட பகுதியை சேர்ந்த 32 வயதுடைய தினேஷ் அமில என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சமையற்காரராக கடமை புரியும் இவர், நேற்று இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு உணவு சமைத்து கொடுத்துவிட்டு வீடு திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிக வேகத்தின் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பத்தேகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + four =

*