;
Athirady Tamil News

ஓமந்தை :வீட்டில் பிறந்த குழந்தை புதைக்கபட்ட நிலையில் மீட்பு..!! (படங்கள்)

0

ஓமந்தை விளாத்திகுளம் பகுதியில் இன்று அதிகாலை குறித்த சம்பவம்நடைபெற்றுள்ளது. கர்பிணியான தாய் குழந்தையை வீட்டிலேயே பிரசவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

குழந்தை உயிரிழந்த நிலையில் பிறந்தமையால் அதனை நிலத்தில் புதைத்திருக்கலாம் என்று போலிசார் கூறினர். சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியபடுத்தபட்டதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நிலத்தில் புதைக்கபட்டிருந்த குழந்தையை மீட்டுள்ளனர்.

குழந்தையின் தந்தையை கைதுசெய்துள்ளதுடன் தாய் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 7 =

*