வவுனியா CCTMS பாடசாலை பரிசளிப்பு விழாவும் தரம் 5 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்..!! (படங்கள்)
பரிசளிப்பு விழாவும் தரம் 5 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இன்று (30) வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது.
புலைமைப்பரிசில் பரீட்சையில் விசேட சித்தி பெற்ற மாணவர்கள் மற்றும் அதிதிகள் பாண்ட் வாத்தியங்களுடன் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.
பாடசாலை மாணவிகளின் குழுப்பாடல் மற்றும் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் அதிதிகளால் புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் தேசியரீதியில் சாதனை படைத்த மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிய அதிதிகளுக்கும் நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
விசேடமாக வடமாகாண ரீதியில் யூடோ தரங்கணிப்பு போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற தரம் 5 கல்விகற்றுவரும் ஆர்.கெ.கெவின் என்ற மாணவன் வடமாகாணத்தில் மிகக் குறைந்த வயதில் யூடோவில் 6 கியூ என்ற சான்றிதழை பெற்றமைக்காக கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வவுனியா கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா, வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியின் முதல்வர் k.சுவர்ணராஜா, ஆரம்பக்கல்வி பிரதிக்கல்வி பணிப்பாளர் சி.முரளிதரன், பாடசாலை ஆசிரியர்கள்,பெற்றார், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா