;
Athirady Tamil News

கிளிநொச்சி மாவட்டத்தில் 8000 க்கும் மேற்ப்பட்டோருக்கு வறட்சி நிவாரணம்..!! (படங்கள்)

0

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி,கண்டாவளை,பூநகரி,மற்றும் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் இன்று காலை செயலக மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 8000 க்கும் மேற்பட்டோர் தெரிவு செய்யப்பட்டு,இன்று பூநகரி,பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகங்களுக்கான,2400 பேருக்கான நிவாரண பொருட்கள் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் சார் பிரதிநிதிகளினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பூநகரி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட கரியாலை நாகபடுவான் கிராம பகுதியில், kn 71 கிராம சேவையாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட 520 பேருக்கான வறட்சி நிவாரணம் வழங்கும் நிகழ்வு 30/11 அன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களினது பிரதிநிதிகளான, பூநகரி பிரதேச சபை உறுப்பினர் ஹபீர்,மற்றும் இணைப்பாளர் பழனியாண்டி நந்தகுமார்,வட்டார பிரதிநிதிகள்,பிரதேச செயலாளர் ஆகியோர் இணைந்திருந்து நிவாரணப்பொருட்களை வழங்கியிருந்தனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலக பிரிவிற்கு உட்பட்ட ,1897 பேருக்கு விவசாய வறட்சி நிவாரணமும் இன்று பெற்றுகொடுக்கப்பட்டிருந்தது.
பளை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் விவசாய வறட்சி நிவாரணம் வழங்கும் நிகழ்வு செயலக மண்டபத்தில் இன்று 30/11 இடம்பெற்றிருந்தது.

விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களினது பிரதிநிதிகளான பளை பிரதேச சபை உறுப்பினர் நகுலேஸ்வரன்,கிளிநொச்சி மாவட்ட அலுவலக இணைப்பாளர் பழனியாண்டி நந்தகுமார்,பிரதேச செயலாளர் ஆகியோர் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைத்திருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 8 =

*