;
Athirady Tamil News

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு..!! (படங்கள்)

0

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு. (படங்கள் இணைப்பு)

வவுனியா தேசிய இளைஞர் சேவை மன்றமும் மொனராகலை விபில பிரதேச சம்மேளனமும் மறவன்குளம் சமூதாய அடிப்படை சங்கமும் இணைந்து மறவன்குளம் வ/பாரதிதாசன் மகா வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 30/11/2018 அன்று வவுனியா பிரதேச இளைஞர் சேவை அதிகாரி தே.அமுதராஜ், ஈச்சங்குளம் சமுர்த்தி உத்தியோகத்தர் ரி.ரமேஸ் ஆகியோரின் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

மொனராகலை விபில பிரதேச இளைஞர்கள் அண்மையில் இளைஞர் பரிமாற்ற வேலை திட்டத்தின் கீழ் மறவன்குள பகுதியில் தங்கியிருந்து சமூகத்தின் நிலைமைகளை ஆராய்ந்து தமது முயற்சியால் சேகரிக்கப்பட்ட கற்றல் உபகரணங்களினை தாங்களே வருகைதந்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வவுனியா பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திருமதி சந்திரகுமார் அவர்களும் சிறப்பு அதிதிகளாக வ/பாரதிதாசன் வித்தியாலய முதல்வர் ந.இந்திரகுமார், வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன முன்னாள் தலைவரும் வவுனியா நகர சபையின் கௌரவ உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன் , வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை கௌரவ உறுப்பினர் செ.றீகன் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன்.

கௌரவ அதிதிகளாக மறவன்குள முன்னாள் கிராம சேவையாளர் அன்ரனிதாஸ், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் த.சதீஷ்குமார், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மேலதிக பணிப்பாளர் சிசிர செனவிரட்ண, வவுனியா தெற்கு இளைஞர் சேவை அதிகாரி ஜி.அஜித் சந்திரசேன, தோழா அமைப்பின் தலைவரும் சமுர்த்தி உத்தியோகத்தருமான எம்.சுஜித், கூமாங்குள சமுர்த்தி உத்தியோகத்தர் எம்.விக்னேஸ்வரன், கல்மடு சமுர்த்தி உத்தியோகத்தர் எம்.மதுரதீபன், ஸ்காப் உதவும் உறவுகள் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் வ.வசந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*