;
Athirady Tamil News

பெண்களுக்கான அரசியல் தளத்தினை அமைக்க வேண்டிய தேவை சிவில் சமூக அமைப்புகளுக்குண்டு : ந.சுகிர்தராஜ் தெரிவிப்பு..!! (படங்கள்)

0

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவுள்ளமையினால் , அவர்களிற்கான சாதகமான அரசியல் தளத்தினை அமைக்கவேண்டிய தேவையும் அவர்களது தற்துணிவை ஊக்குவிக்கவேண்டிய தேவையும் சிவில் சமூக அமைப்புகளுக்குண்டு.என

யாழ்.சமூக செயற்பாட்டு மைய இணைப்பாளர்.ந.சுகிர்தராஜ் தெரிவித்தார் .

பெண்களளை அரசியலில் பங்காளிகளாக்கும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக வடமாகாண ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அரசியலில் ஆர்வமுள்ள 25 பெண்களுக்கான பயிற்சி நெறி ஜெசாக்நிறுவனத்தின் ஏற்பாட்டில் வவுனியா ஈரப்பெரிய குளம் தனியார் விடுதியில் கடந்தஇருநாட்கள் நிறுவனஇணைப்பாளர்ந.சுகிர்தராஜதலைமையில் இடம்பெற்றது . தலைமையுரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில்

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவுள்ளமையினால் , அவர்களிற்கான சாதகமான அரசியல் தளத்தினை அமைக்கவேண்டிய தேவையும் அவர்களது தற்துணிவை ஊக்குவிக்கவேண்டிய தேவையும் சிவில் சமூக அமைப்புகளுக்குண்டு. என்ற வகையிலு ம் ”அரசியலில் பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம் இலங்கையில் நியாயமான மற்றும் பொறுப்பு உணர்வு மிக்க அரசியல் பிரதிநிததித்துவத்திற்கான ஒரு தளத்தினை உருவாக்குதல் ” என்ற கோட்பாட்டில் ஜெசாக் நிறுவனம் யூஎஸ்எயிட் இன் எஸ் டி கப் [USAID/SDGAP ] இன் நிதியனுசரணையில்கிராமமட்ட விழிப்புணர்வு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் திட்டமிடப்பட் ட இவ் பயிற்சியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி , முல்லைத்தீவு , மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 25 பெண்கள் பங்கு கொண்டுகலந்துரையாடியுள்ளனர். இத்துடன் குறித்த மாவட்ட ங்களிலும் இது தொடர்பிலான செயலமர்வுகளை நடாத்தி உள்ளோம் . மாவட்டங்கள் அடிப்படையில் வடக்கில் மொத்தம் 125 பெண்களுக்குபயிற்சி வழங்கி உள்ளோம் இப்பயிற்சி இன்னும் தொடர்ந்து இடம்பெறும் . இதன் ஒரு கட்டமாக ஒவ்வொரு பிரதி நிதிகளுக்கூடாக தமது கிராமங்களில் அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவம்தொடர்பிலான கலந்துரையாடல்களை ஆரம்பித்து உள்ளோம் .

பெண்களின் பங்களிப்பு அதிகம் . வேண்டும் பெண்கள் அரசியலில் பங்களிக்க ஆர்வம் இருந்தாலும் குடும்ப சூழல், இரட்டை சுமை என்று பின்னடிக்கின்றனர். துணிந்து பங்கு . பங்கு கொள்ள பயம்உள்ளது, இது எனக்கு உரிமை இல்லை என்பது போன்று பெண்களே அக்கறை இல்லாமல் உள்ளனர். . 25 வீதம் பெண்கள் அடுத்த பாராளுமன்றம் வரவேண்டும் .

ஜனநாயக வழியில் வரவேண்டும் . பெண்கள் தற் பாதுகாப்பு கலைகளையும் கற்று இருந்தால் சிறப்பு அல்லது பழக வேண்டும் . கௌரவமான வார்த்தை பிரயோகம் அணுகுமுறை கட்டாயம் .அரசியலுக்குள் வருவது தெளிவாக்குவது சவால் தான் . குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தில் பெண்கள் அரசியலில் ஈடுபடுவது ஆண்களுக்கு விருப்பு இல்லை . அந்த வகையில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்ன ? எந்தவகையில் இருக்கப்போகின்றது, சமூக வலைப் பின்னலை எவ்வாறு உருவாக்குவது , பங்கு தாரர்களை உருவாக்குதல் . சமூகத்தில் மாற்றத்தைஏற்றப்படுத்த வேண்டும் .அந்தவகையில் முதலில் சமூகத்தின் மனங்களில் மாற்றம் ஏற்படவேண்டும் எங்கு பிரச்சனை வந்தாலும் துணிந்து நேரில் இறங்க வேண்டும் .என்றார்

கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் ஊடகவியலாளருமான உமாச்சந்ரா பிரகாஷ் தெரிவிக்கையில் ,

ஊடகங்களில் பெண்களுக்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன அவற்றை பெண்கள் தான் பயன்படுத்துவதில்லை . அரசியலில் பங்கு கொள்கின்ற பெண்களை எந்த பாரபட்சமும் இன்றி ஊடகங்கள்வெளிப்படுத்திவருவதனை நானும் ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் அவதானித்துள்ளேன் . . அரசியலில் ஈடுபட விரும்பும் பெண்கள் நகையையோ காணியையோ வித்தோ சுட்டோசமூகத்துக்காக சேவை செய்ய வேண்டும் என்ற எந்த மனநிலையும் தேவை இல்லை. உண்மையில் வயது வித்தியாசம் இன்றி இதில் பலர் பங்கு பற்றுவது வரவேற்கக் கூடியது. உங்களில்இயன்றவரை யாரோ பாராளுமன்றம் போகும் நிலையை ஏற்படுத்தும் வகையில் நேர்மையான சமூக சிந்தனையுடன் பெண்கள் பங்களிக்க வேண்டும். கட்சி அரசியல் என்ற அடிப்படையில் நீங்கள்உங்கள் காணியோ நகையோ சுட்டோ வித்தோ சொந்த பணத்தில் அரசியல் சேவை செய்ய வேண்டும் என்ற எந்த மனநிலையும் தேவை இல்லை சரியான முறையில் நேர்மையானதும்கௌரவமானதுமான வகையில் பெண்கள் தற்துணிவுடன் முன்வரவேண்டும். பெண்களுக்காக ஊடகங்கள் எதுவும் இல்லை. ஊடகங்கள் சந்தர்ப்பம் கொடுப்பதில்லை என்ற விமர்சனங்கள்பொருத்தமானது அல்ல . ஊடகங்களில் பெண்களுக்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன அவற்றை பெண்கள் தான் பயன்படுத்துவதில்லை . அரசியலில் பங்கு கொள்கின்ற பெண்களை எந்தபாரபட்சமும் இன்றி ஊடகங்கள் வெளிப்படுத்திவருகின்றன . நீங்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றார் . இதனைத் தொடர்ந்து . சட்டத்தரணி கே.ஐங்கரன் குறிப்பிடுகையில் ‘,

அரசாங்கம் 2015 இல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டது . அதற்கு அமைவாக 2016 .8.16 பாராளுமன்றில் நிறைவேற்றப் பட்டு பின்பு 2017.2.4 அன்று அமுலுக்குவந்தது. . அரசியலில் பங்கு கொள்பவர்கள் மட்டுமன்றி , சாதாரண குடிமகன் வரை தனக்கு தேவையான தகவல்களை குறித்த அலுவலகங்களில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் .அதற்கு என்றுதகவல் தொடர்பு அதிகாரிகள் உள்ளனர். அவர்களிடம் விண்ணப்பம் கையளிக்கும் போது பெற்றதற்கான பற்றுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள முடியும். நாட்டின் பாதுகாப்பு கருதி சில தகவல்களை பெறமுடியாத நிலை உண்டு .அவை தவிர விண்ணப்பித்து 14 வேலை நாட்களுள் அதற்கான பதிலைப் பெற முடியும். எனவே சராசரி தொண்டனாக , அரசியல் பங்காளியாக இந்த தகவலை உங்கள்சமூகத்திலும் எடுத்துச் சென்று தேவையான விடயங்களை பெற முடியும் . இந்த உரிமைச் சட் டம் ஊடாக நாட்டின் அபிவிருத்தியில் , அரசியல் பங்களிப்பில் சமூகத்திற்கு உதவ முடியும் என்றார். .

இப்பயிற்சியில் அரசியலில் பெண்கள் பங்களிப்பும் ஊடகங்களின் பயன்பாடும் . பெண்கள் எவ்வாறு செயற்படவேண்டும். அவர்களுக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பு .எவ்வாறு அமையவேண்டும். பங்களிப்பில் உள்ள சட்டங்கள் , அடிப்படை பிரச்சனைகள் , பெண்கள் பிரதிநிதி துவத்தின் அவசியம் , சவால்கள் போன்ற விடயங்கள் மற்றும் அரசியலிலும் ஊடகத்திலும் பெண்களின்பங்களிப்பு ?.

ஊடகங்கள் என்றால் என்ன ? அவை எப்படி செயற்படுகின்றன.அவற்றின் பங்களிப்பு என்ன குறிப்பாக தொலைக்காட்சி ஊடகத்தின் அரசியல் பங்களிப்பு என்ன. அரசியலில் பெண்களின் பங்களிப்பு மக்களுடனான அணுகுமுறை , மற்றும் உடை, குறித்த விளக்கங்களுடன் ஒரு வேட்பாளராக சமூகத்தை எப்படி இனங்காணல், வெளிப்படுத்துதல், அறிமுகம் செய்தல், போன்றன பயிற்சியளிக்கப்பட்டன . தேர்தல் பிரச்சார அணுகுமுறை ,வேட்பாளர் அறிமுகம் , சமூக அணிதிரட்டல் பயிற்சி ஊடாக . அரசியல் வாதிகளுக்கும் மக்களுக்குமான தொடர்பாடல் குறித்து மாதிரிச்செயற்பாடுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத் தக்கது.

தொகுப்பும் படங்களும்

யாழ்.தர்மினி பத்மநாதன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − eighteen =

*