;
Athirady Tamil News

கோயில் குருக்களே கந்தபுராணபடனத்துக்கு உரை சொல்லியது அந்தக் காலம்: செஞ்சொற்செல்வர் ஆதங்கம்..!!

0

அந்தக் காலத்தில் கோயில் குருக்களே கந்தபுராணபடனத்துக்கு உரை சொல்லுவார். ஆனால்,தற்போது உரை சொல்வதற்கே யாருமில்லாத காலம் என தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், சிவபூமி அறக் கட்டளையின் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் கடும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

நல்லைநகர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் நினைவு வைபவம் இன்று வெள்ளிக்கிழமை(30-11-2018) முற்பகல் யாழ். நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்ற போது தலைமை தாங்கி உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நீர்வேலி கந்தசுவாமி கோயிலில் நாகபடப் பந்தல் போட்டு கந்தபுராணப் படிப்பு இடம்பெற்றது. அனைவரும் பிடியரிசி சோறு சேர்த்துக் கொண்டு வந்து புராண படிப்பு நிறைவுநாளில் அன்னதானம் வழங்கப்படும்.

அங்கு புராண படிப்பு இடம்பெறும் போது அடியவர்கள் விலகுவதற்காக சில ஆளுமையுடையவர்களை நியமித்து வைத்திருந்தார்கள். அவர்கள் துவாய்த் துண்டால் அடித்தால் வாங்க வேண்டியது தான்.அல்லது வெளியில் செல்ல வேண்டியது தான்.

நீர்வேலி கந்தசுவாமி கோயிலில் நாங்கள் அறியவே ஐந்து பண்டிதர்கள் அமர்ந்திருந்து கந்தபுராணத்துக்கு உரை சொன்னார்கள்.பண்டிதர் முருகேசு, பண்டிதர் தம்பையா, பண்டிதர் இராசதுரை போன்ற பலருமிருந்தார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 1 =

*