;
Athirady Tamil News

ரயில் கடவையை கடக்க முற்பட்ட ரக்!!(படங்கள்)

0

ரயில் கடவையை கடக்க முற்பட்ட ரக் வாகனத்தை ரயில் பாதையில் வந்த தொடருந்து மோதி விபத்துக்குள்ளாகியது. எனினும் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் கொடிகாமம் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள ரயில் கடவையில் இடம்பெற்றது.

மகேந்திரா ரக ரக் வாகனத்தின் பின்பகுதியில் தொடருந்து மோதியது. அதனால் ரக் வாகனம் வீதிக்கு தள்ளப்பட்டது. எனினும் சாரதிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் பெருமளவானோர் கூடினர்.
–“அதிரடி” இணையத்துக்காக, – ஐ.சிவசாந்தன்–

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 10 =

*