;
Athirady Tamil News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் 32 அணி கலைப்பீட மாணவர்களின் சாதனை!!(படங்கள்)

0

யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றில் பழைய மாணவர் அணி ஒன்றால் வேரூன்றி நிதியம் என்ற பெயரில் சமூக தொண்டு அமைப்பு ஒன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

கலைப்பீடத்தினைச் சேர்ந்த 32ஆம் அணி பழைய மாணவர்களின் கூட்டு முயற்சியினாலேயே இந்த அமைப்பு சனிக்கிழமை(1) கொக்குவில் செல்வா பலஸ் மாளிகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காலை ஒன்பது மணிக்கு மேற்படி அணியினைச் சேர்ந்த பழைய மாணவர்களின் வருடாந்த மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு ஆரம்பமானது. இதில் யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியின் அனுமதியுடன் பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நாட்டப்பட்டது.

நிகழ்வுகளினைத் தொடர்ந்து மாலை மூன்று மணியளவில் குறித்த அமைப்பினை அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வு பழைய மாணவர் வ.சண்முகராஜாவின் ஒருங்கிணைப்பின்கீழ் மேற்கொள்ளப்பட்டது.

இதன்பின்னர் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் என தமிழர் பிரதேசங்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளைக்கொண்ட மத்திய செயற்குழு அமைக்கப்பட்டது. நிகழ்வின்போது 32ஆம் அணியினைச் சேர்ந்த இரு நூறுக்கும் மேற்பட்ட பழைய மாணவ மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது நிதியத்தின் நோக்கம் குறித்து அங்குரார்ப்பண அறிக்கையில் வாசிக்கப்பட்டதாவது,

”நிதியத்தின் தலையாய நோக்கம் கல்வி சார்ந்த உதவியினை மேற்கொள்வதாகும். வறுமை எமது பிள்ளைகளின் கல்விக்குத் தடையாக அமைந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் ஒரு செயற்திட்டம் மேற்கொள்ளப்படும். இந்த செயற்திட்டமானது ஒவ்வொரு தொகுதியிலும் சுழற்சி அடிப்படையில் மேற்கொள்ளப்படும். தொகுதிக்குப் பொறுப்பான பிரதிநிதிகள் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் இதனை முன்னின்று செய்வார்கள். ஒரு செயற்திட்டமானது மாதத்தின் இரண்டாவது கிழமையில் வரும் சனி அல்லது ஞாயிறு நாட்களில் இடம்பெறும்.

இவை தவிர நமது எல்லைக்குள் பேரனர்த்தங்கள் நிகழும் சந்தர்ப்பங்களிலும் நிதியம் களத்தில் இறங்கும். அந்த தொகுதிக்குப் பொறுப்பான பிரதிநிதி ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து உலர் உணவு, சமைத்த உணவு, உடை மற்றும் மீட்புப் பணி போன்றவற்றில் ஈடுபடுவார். மேலதிகமாக ஏனைய தொகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் இதில் பங்கெடுப்பர்.” என கூறப்பட்டது.

எவ்வாறாயினும் நிதியம் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் நண்பர்களின் பூரண ஒத்துழைப்புடன் தூர நோக்குச் சிந்தனையுடன் செயற்படும் என இதன்போது கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தகதாகும்.
–“அதிரடி” இணையத்துக்காக -பாறுக் ஷிஹான்–

????????????????????????????????????

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + one =

*