;
Athirady Tamil News

மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல்-யாழ்!!

0

தனிமையில் வாழ்ந்த மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல், அங்கிருந்து தப்பித்தது. படுகாயமடைந்து மூதாட்டியை குருதி வெள்ளத்திலிருந்த மீட்ட மகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்.

உடுவிலில் இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.
எம் பொன்மலர் (வயது-72) என்ற மூதாட்டியே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலே மூதாட்டியைத் தாக்கினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த மூதாட்டியை அதிகாலையில் உணவு வழங்க சென்ற மகள் கண்ணுற்று அவசர இலக்கமான119 இற்கு அழைப்பினை மேற்கொண்டு உடனடியாக அம்புலன்ஸின் உதவியுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார்.
வீட்டிலே பெரிய வளர்ப்பு நாய் நின்றுள்ளது. அது குரைத்த சத்தம் கேட்கவில்லை. இரண்டு கைகளும் கொடூரமாக அடித்து உடைக்கப்பட்டுள்ளன.

தலைப்பகுதி,மற்றும் முகங்கள் முழுவதும் அடிகாயங்கள் காணப்படுகின்றன. கொள்ளையிடும் நோக்கத்தோடு இச்சம்பவம் இடம்பெறவில்லை என பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகளின் கணவனார் ( தாதிய உத்தியோகத்தர் – தெல்லிப்பளை வைத்தியசாலை) தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + four =

*