;
Athirady Tamil News

பாரதி முன்பள்ளியின் ஒளிவிழா!!(படங்கள்)

0

பாரதி முன்பள்ளி வேப்பங்குளம் வவுனியா 01/12/2017 அன்று மிகவும் சிறப்பாக பாரதி முன்பள்ளியில் ஒளிவிழா நிகழ்ச்சிகள் தலைவர்
நெ. லோறன்ஸ் அவர்களின் தலைமையில் நடந்து முடிந்தது. இவ் விழாவை சிறப்பிப்பதற்கு எமது அழைப்பை ஏற்று வருகை தந்த.
சிறப்பு விருந்தினர் சனசமூக நிலையத்தின் தலைவர் கனேசராசா, சனசமூக நிலையத்தின் செயலாளர் சிவராஜசேகரம் மற்றும் வேப்பங்குளம் வாழ் மக்களும் கலந்து கொண்டனர்.

எமது முன்பள்ளிக்கு இது வரை காலமும் பெயரும் புகழும் பெற்றுத்தந்த 5 வயது மாணவச்செல்வங்கள் 16 பேரும் தமது பாடசாலை கல்வியை தொடர்வதற்கு எமது முன்பள்ளியை விட்டு விலகிச் செல்கிறார்கள் அவர்கள் தமது பாடசாலை கல்வியில் பல்கலையும் கற்று சீரும் சிறப்பும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார் என்று எமது முன்பள்ளி சமூகத்தின் சார்பில் வாழ்த்தி வழியனுப்புகிறோம்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × four =

*