;
Athirady Tamil News

உ.பி.யில் வன்முறை – போலீஸ் இன்ஸ்பெக்டரை கொன்ற 5 பேர் கைது..!!

0

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

அங்குள்ள புலந்த்‌ஷர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றின் வனப்பகுதியில் 25 பசுக்கள் இறந்த நிலையில் கிடந்ததாக தெரிகிறது.

இதையடுத்து சட்ட விரோதமாக பசுவதை கூடம் செயல்படுவதாக கூறி இந்த அமைப்பினர் கிராமத்திற்குள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சாலையை மறித்தனர். இதை தொடர்ந்து போலீசார் அந்த பகுதிக்கு வந்தனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையானது. போலீசார் மீது கற்களை வீசினர். அதோடு போலீஸ் நிலையத்துக்குள் புகுந்தும் தாக்கினார்கள். வாகனங்களையும் தீவைத்து கொளுத்தினார்கள்.

இதையடுத்து வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது.

இந்த வன்முறையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத்குமார் சிங் கொல்லப்பட்டார். அவரை கும்பல் கல்வீசி தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தார்.

போலீசாரின் துப்பாக்கி சூட்டில் சுமித் என்ற வாலிபர் குண்டு பாய்ந்து பலியானார். இதே போல இந்த வன்முறையில் சில போலீசாரும் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங்கை அந்த கும்பல் கல்வீசி தாக்கியதோடு துப்பாக்கியாலும் சுட்டது தெரிய வந்துள்ளது. பிரேத பரிசோதனையில் அவரது இடது கண் அருகே துப்பாக்கி குண்டு பட்டு உயிர் இழந்ததை உறுதி செய்தது.

அந்த கும்பல் சுபோத் குமாரிடம் இருந்து செல்போனையும், துப்பாக்கியையும் பறித்து சென்றதும் தெரியவந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டரை கல்லால் அடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொன்ற 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வன்முறை தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் போலீசார் 87 பேரை சேர்த்து உள்ளனர். இதில் 27 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 50 முதல் 60 பேர் வரை அடையாளம் தெரியாதவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எப்.ஐ.ஆரில் பஜ்ரங்தளம் மூத்த தலைவர் யோகேஷ் ராஜ் பெயரும் இடம் பெற்றுள்ளது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத்குமார் சிங்கை இந்து அமைப்பினர் முன் கூட்டியே திட்டமிட்டு தாக்கி கொன்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆயுதங்களை கையாள்வதில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி குடும்பத்துக்கு ரூ.40 லட்சமும், சுமித் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும் வழங்க உத்தர விட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*