;
Athirady Tamil News

படகுகளைப் பதிவு செய்யும் பணிகள் விரைவில் ஆரம்பம்!!

0

யாழ்ப்­பா­ணம், கடற்­றொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளத்­தில் இது­வரை பதி­வு­செய்­யப்­ப­டாத பட­கு­க­ளைப் பதி­வு­செய்­யும் பணி­கள் விரை­வில் ஆரம்­பிக்­கப்­ப­டும் என்று கடற்­றொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளம் தெரி­வித்­தது.

நெடுந்­தீவு, ஆழி­ய­வளை, வேலணை, ஊர்­கா­வற்­றுறை பிர­தே­சங்­க­ளில் இது­வ­ரைக்­கும் பதிவு செய்­யப்­ப­டாத 300க்கும் மேற்­பட்ட பட­கு­கள் அண்­மை­யில் பதி­வு­செய்­யப்­பட்­டன.

யாழ்ப்­பா­ணத்­தில் இது­வரை 700க்கும் மேற்­பட்ட பட­கு­கள் பதி­வு­செய்­யப்­ப­டா­மல் உள்­ளன. அவ்­வாறு பதி­வு­செய்­யப்­ப­டா­மல் உள்ள பட­கு­க­ளைப் பதி­வு­செய்­யும் நட­வ­டிக்­கை­கள் விரை­வில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன.

கொழும்­பில் இருந்து கடற்­றொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளத்­தைச் சேர்ந்­தோர் இந்­தப் பதிவு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக விரை­வில் யாழ்ப்­பா­ணம் வருகை தர­வுள்­ள­னர். இந்த ஆண்­டுக்­குள் இந்­தப் பதிவு நட­வ­டிக்­கை­கள் முழுமை பெறும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 5 =

*