முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிரதமர் இல்லை!!

அமைச்சரவையை இடைநிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிரதமர் இல்லை என்பதுடன், அவருக்கு வழங்கப்பட்ட மேலதிக பாதுகாப்பை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (04) அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி என்பதால் பாதுகாப்பை முற்றாக அகற்றாது, பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், வழங்கப்பட்ட மேலதிக பாதுகாப்பை மட்டும் அகற்றுமாறு கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதன் பின்னர் பொலிஸ் மா அதிபர், ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்களின் பாதுகாப்பை நீக்கியது போல், உடனடியாக செயற்பட்டு மஹிந்த உட்பட பொய்யான அமைச்சர்களின் பாதுகாப்பை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை பலம் இருக்கின்ற எங்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.!!