;
Athirady Tamil News

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – டிசம்பர் 11ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு..!!

0

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை.

சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ளதால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு தாமதமாகலாம் என எதிர்க்கட்சிகள் கருதி வந்தன.

இதையடுத்து, பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 11-ம் தேதி முதல் தொடங்க உள்ளது என பாராளுமன்ற விவகாரங்கள் துறை அறிவித்தது. அதில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்குவது எனவும், குளிர்கால கூட்டத்தொடரை ஜனவரி 8-ம் தேதி வரை நடத்தவும் முடிவானது என தெரிவித்தது.

இதற்கிடையே, பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் விவாதம் செய்யவேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க எதிர்கட்சிகள் சார்பில் டிசம்பர் 10ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்க முடிவாகியுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெறும் வகையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், டிசம்பர் 11-ம் தேதி மதியம் 3 மணியளவில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*