;
Athirady Tamil News

ஆளுநர் றெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் தீவக அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம்!!(படங்கள்)

0

ஆளுநர் றெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் தீவக அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் இன்று (05.12.2018) வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தீவகத்தின் கல்வி மேம்பாடு உட்கட்டமைப்பு வசதிகள் விவசாயம் மீன்பிடி போக்குவரத்து சம்பந்தமாக இங்கு பேசப்பட்டது.
மாகாண கல்வி பணிப்பாளர் உதயகுமார் வேலணை உதவிப் பிரதேச செயலர் பிரதேசசபை தலைவர் கருணாகரமூர்த்தி பேராசிரியர் பாலசுந்தரம்ப்பிள்ளை பேராசிரியர் குகபாலன் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன் உதவிச் செயலர் ஏஎக்ஸ் செல்வாநாயகம் ஆளுநரின் பிரதம ஆலோசகர் எஸ்எஸ்.குகநாதன் உள்ளிட்ட தீவக வலய சமூகபிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

தீவகத்தில் மாணவர்களின் கல்வியினை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கடந்தகால கல்விச் செயற்பாடுகள் குறித்தும் ஆளுநர் கேட்டறிந்து கொண்டார். குறிப்பாக தீவகத்தில் மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக காணப்படும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்த ஆளுநர் கடல் நீரியிலிருந்து குடிநீரை பெறுவதற்கான பொறிமுறையினை உருவாக்குதல் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் திட்டங்களை சமர்ப்பிக்குமாறும் பணித்தார்.
தீவக மக்களின் பிரதான விவசாய நடவடிக்கையான புகையிலையினை தேசிய ரீதியில் தடைசெய்யும் திட்டம் 2020ம் ஆண்டளவில் நடைமுறைக்கு வரும் நிலையில் அதற்கான மாற்றுப் பயிர்களை பயிரிடுவது தொடர்பில் விவசாய போதனா ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். குறிப்பாக முருங்கை கத்தாளை போன்றவற்றை மாற்றுப் பயிராக கொண்டுவருவதற்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தீவக கல்வி மேம்பாட்டில் விசேட கவனத்தினை தாம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர் எதிர்வரும் வாரங்களில் கல்விக்கான விசேட கூட்டமொன்றினை தீவக பாடசாலை அதிபர்களுடன் நடாத்தவுள்ளதாக தெரிவித்தார்.
தகவல் & படங்கள்.. “அதிரடி” இணையத்துக்காக வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு…

????????????????????????????????????

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − three =

*