;
Athirady Tamil News

வவுனியா பேரூந்து நிலையத்திற்கு முன்னால் உயிரைப்பறிக்க முனைந்த இ. போ.ச பேரூந்து!!(படங்கள்)

0

வவுனியா பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை இபோச பேரூந்து சாரதியின் அசமந்தமான செயற்பாட்டால் விபத்தொன்று ஏற்பட்டள்ளது. எனினும் இரு இளைஞர்கள் அதிஸ்டவசமாக உயிர்தப்பியுள்ள நிலையில் ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
வவுனியா ஏ9 வீதியில் இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தனர். இதன்போது வேகமாக பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து வீதியால் வந்த இளைஞர்களை கவனத்தில் கொள்ளாது பேரூந்து நிலையத்திற்குள் நுழைவதற்காக பேரூந்தை வேகமாக திருப்பியுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களும் பேரூந்தின் பின் பகுதியில் மோதுண்டு கீழே வீழ்ந்து காயமடைந்துள்ளனர்.
இந் நிலையில் மோட்டார் சைக்கிளில் பெரும் சேதத்திற்கு உள்ளானது.

கீழே விழுந்த இரு இளைஞர்களும் தாம் உயிர் தப்பிய அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இ.போ.ச சரதியும் நடத்துனரும் இளைஞர்கள் மீது குற்றம்சாட்டியவாறு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
எனினும் குறித்த பகுதியில் நடந்து சென்ற வயோதிபர் குறித்த சம்பவத்தினை நேரடியாக தான் கண்டதாகவும் பேரூந்து செலுத்தப்பட்ட விதமே பிழையானது என பொலிஸாருக்கு தெரிவித்தார்.
எனினும் இ.போ.ச சாரதியும் நடத்துனரும் குறித்த வயோதிபரை அப்பகுதியில் இருந்து அகன்று செல்லுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதுடன் பொலிஸார் மூலமாக குறித்த கண்கண்ட சாட்சியை கலைக்க முயன்றனர்.
எனினும் பொலிஸார் குறித்த பகுதியில் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பேரூந்தினையும் சேதத்திற்குள்ளான மோட்டார் சைக்கிளினையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + twenty =

*