;
Athirady Tamil News

சிறைச்சாலை பஸ் ஒன்று இன்று அதிகாலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது.!!

0

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சிறைச்சாலை பஸ் ஒன்று இன்று அதிகாலை 04.00 மணியளவில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

மாத்தறை சிறைச்சாலையில் இருக்கின்ற பெண் கைதிகள் ஐந்து பேர் கொழும்புக்கு நீதிமன்ற நடவடிக்கைக்கு அழைத்து வந்த பஸ் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காலி சமுத்ர மாவத்தை கடற்படை முகாமிற்கு அருகில்​ பாதையை விட்டு விலகிய பஸ் அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பஸ்ஸின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை மயக்கமே விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விபத்துக்குள்ளான பஸ்ஸில் இருந்த கைதிகள் காலி சிறைச்சாலைக்கு சொந்தமான பஸ் மூலம் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 11 =

*