;
Athirady Tamil News

லண்டனில் பாத்ரூமில் கொலை செய்யப்பட்டு கிடந்த கர்ப்பிணி பெண்: விசாரணையில் அடுத்தடுத்து வெளிவரும் உண்மை..!!

0

பிரித்தானியாவில் ஏற்கனவே குழந்தைகள் உள்ள நிலையில், அடுத்து குழந்தை வேண்டாம் என்பதற்காக கணவன் கர்ப்பிணி மனைவியை கொலை செய்திருக்கும் சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Neasden பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் Ioan Campeanu(44).இவருக்கு Andra Hilitanu(28) என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர்

இந்நிலையில் கடந்த மே மாதம் 31-ஆம் திகதி Ioan Campeanu அவசர உதவிக்கு தொடர்பு கொண்டு அவள் இறந்துவிட்டாள், நான் தான் அவளை கொலை செய்தேன், கத்தரியால் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவசர உதவி தொடர்பாளர் உடனடியாக குறித்த குடியிருப்புக்கு ஆம்புலன்சை அனுப்பியுள்ளார்.

ஆனால் அங்கு அவர் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து Ioan Campeanu-ஐ கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

இந்த கொலைக்கு இதுமட்டுமின்றி இன்னும் சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது Andra Hilitanu சமைப்பதில்லை எனவும், வீட்டை சுத்தமாக வைத்து கொள்ளமாட்டார் எனவும், இதன் காரணமாகவே இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும் என்று கூறப்படுகிறது.

இந்த தம்பதிக்கு மொத்தம் எத்தனை குழந்தைகள் என்பது குறித்து தெரிவிக்கவில்லை. இது தொடர்பான வழக்கு விசாரணை old bailey நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + nine =

*