;
Athirady Tamil News

தொலைபேசி உதவியுடன் சாதாரண தரப் பரீட்சை எழுதிய பரீட்சார்த்தி!!

0

கையடக்கத் தொலைபேசி உதவியுடன் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய தனிப்பட்ட பரீட்சார்த்தி ஒருவர் பலாங்கொடை பகுதியிலுள்ள பரீட்சை நிலையமொன்றில் பிடிபட்டுள்ளார்.

பலாங்கொடை ஜெய்லானி வித்தியாலயத்தில் அமைந்துள்ள நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய தனிப்பட்ட பரீட்சார்த்தி ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த பரீட்சார்த்தி, இன்று நடைபெற்ற ஆங்கிலப் பரீட்சைக்காக விடை எழுதிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அவரது நடவடிக்கை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, பரீட்சை கண்காணிப்பு உத்தியோகத்தரால் நிலையப் பொறுப்பாதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட தனிப்பட்ட பரீட்சார்த்தியை சோதனைக்கு உட்படுத்தியபோது அவர் கையடக்கத் தொலைபேசியை தனது உடலில் மறைத்து வைத்திருந்ததுடன், குறுந்தகவல் ஊடாக கிடைத்த பதில்களை எழுத்தியுள்ளமை கண்டறியப்பட்டதாக செய்தியாளர் குறிப்பிட்டார்.

பரீட்சைக்கு சுமார் 20 நிமிடங்கள் தாமதமாகவே இந்த பரீட்சார்த்து சமூகமளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பலாங்கொடை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மூலம், தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் ஒருவரால் குறிப்பிட்ட பரீட்சார்த்திக்கு குறுந்தகவல் ஊடாக விடைகள் அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

தனியார் வகுப்பு நடத்தும் ஆசிரியரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை பலாங்கொடை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். 
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + five =

*