;
Athirady Tamil News

இந்த ஆண்டில் ஊவா மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு!

0

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஊவா மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக ஊவா மாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை ஆணையாளர் தெரிவிக்கின்றார்.

2018 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பில் 215 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஊவா மாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை ஆணையாளர் குறிப்பிடுகின்றார்.

பாடசாலைக் கல்வியை இடைநிறுத்துதல் தொடர்பில் 35 சம்பவங்களும்,சிறுவர்களை சட்டவிரோத விடயங்களில் ஈடுபடுத்துதல் தொடர்பில் 06 சம்பவங்கள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான 19 சிறுவர்கள் தொடர்பிலும் தகவல்கள் பதிவாகியுள்ளன,

இவர்களுள் 49 சிறுவர்கள் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன்அரச சிறுவர் இல்லங்களுக்கு 63 சிறுவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்,

அத்துடன் மேலும் 16 சிறுவர்கள் தொழில் மற்றும் சுயதொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஊவா மாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை ஆணையாளர் கூறுகின்றார்,

கடந்தகாலங்களில் 66 சிறுவர்கள் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தொழிற்பயிற்சிகளுக்காக 15 சிறுவர்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறுகின்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × four =

*