;
Athirady Tamil News

யாசர் அராபத் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்த நாள்: 7-12-1988..!!

0

இரண்டாம் உலகப்போருக்குப் பின் பாலஸ்தீனத்தின் ஒருபகுதியைப் பிரித்து இஸ்ரேல் நாடு உருவானது. இதை முதலில் பாலஸ்தீனம் ஏற்கவில்லை. பின் 1988-ம் ஆண்டு யாசர் அராபத் இஸ்ரேல் நாட்டை அங்கீகரித்தார்.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1815 – நெப்போலியனுக்கு ஆதரவாக இருந்த பிரெஞ்சுத் தளபதி மிக்கேல் நேய் என்பவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. * 1900- மாக்ஸ் பிளாங்க் தனது பேர்லின் இல்லத்தில் வைத்து புகழ்பெற்ற கரும்பொருள் வெளியேற்ற விதியைக் கண்டுபிடித்தார். * 1910- யாழ்ப்பாணம், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் புதிய கட்டடம் திறக்கப்பட்டது. * 1917- முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா- ஹங்கேரி மீது ஐக்கிய அமெரிக்கா போரை அறிவித்தது. * 1941- இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, ஹங்கேரி, போலந்து, ருமேனியா ஆகியவற்றின் மீது கனடா போரை அறிவித்தது.

* 1941- இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர் ஹவாயின் பேர்ள் துறைமுகத்தைத் தாக்கினர். * 1946- ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உணவுச்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 119 பேர் கொல்லப்பட்டனர். * 1949- சீனக் குடியரசின் அரசு நான்கிங் நகரில் இருந்து தாய்வானுக்கு மாறியது. * 1966 – துருக்கியில் ராணுவ முகாம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 68 பேர் கொல்லப்பட்டனர். * 1971 – பாகிஸ்தானில் நூருல் அமீன் பிரதமராகவும் சுல்பிக்கார் அலி பூட்டோவை உதவிப் பிரதமராகவும் கொண்ட கூட்டணி அரசை அதிபர் யாகியா கான் அறிவித்தார்.

* 1972 – அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் அப்போலோ 17 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. * 1975 – கிழக்குத் தீமோரை இந்தோனீசியா முற்றுகையிட்டது. * 1983 – ஸ்பெயின் மாட்ரிட் நகரில் இரண்டு விமானங்கள் மோதியதில் 93 பேர் கொல்லப்பட்டனர். * 1987 – கலிபோர்னியாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் தனது முன்னாள் முதலாளியையும் விமான ஓட்டியையும் சுட்டுக் கொன்றபின் தன்னைத்தானே சுட்டுக் கொன்றான். இதனால் விமானம் தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த 43 பேரும் கொல்லப்பட்டனர்.

* 1988- ஆர்மீனியாவில் இடம்பெற்ற 6.9 ரிக்டர் நிலநடுக்கத்தில் 25,000 பேர் கொல்லப்பட்டு 4,00,000 பேர் வீடுகளை இழந்தனர். * 1988- யாசர் அரபாத் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தார். * 1995 – கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + nineteen =

*