;
Athirady Tamil News

சீன நாட்டு பிரஜைகள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது!!

0

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரட்களை ஹொங்கொங் இல் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த சீன நாட்டு பிரஜைகள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவை சேர்ந்த ஆண்கள் இருவரும் பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று (06) இரவு 11.55 ஹொங்கொங் இல் இருந்து கெதே பசுபிக் விமான சேவைக்கு சொந்தமான CX 611 என்ற விமானத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்களின் பயணப் பொதியில் இருந்து 318 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 63,600 சிகரட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 34,98,000 ரூபாய் என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × four =

*