;
Athirady Tamil News

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திலிருந்து பேருந்துசேவைகள் ஆரம்பித்து வைக்கபட்டது!! (படங்கள்)

0

வவுனியாவில் உள்ளுர்சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கும் சென்று பயணிகளை எற்றிச்செல்வதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (07-12-2018) நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடும் உள்ளூர் பேருந்து சேவைகளை பழைய பேருந்து நிலையம் வரை விஸ்தரிக்குமாறு வவுனியா வர்தகர்சங்கம், ஆளுனரிடம் வேண்டு கோள்விடுத்திருந்தனர். இது தொடர்பான சந்திப்பொன்று அனைத்தரப்புகளின் பங்குபற்றுதலோடு நேற்றய தினம் ஆளுனர் மாளிகையில் நடைபெற்றது. அதற்கமைய புதியபேருந்து நிலையத்தில் இருந்து உள்ளுர்சேவைகளை மேற்கொள்ளும் பேருந்துகள் பழையபேருந்துநிலையத்திற்கு முன்பாக அமைக்கபட்டுள்ள பஸ்தரிப்பிடத்திற்கு சென்று 3 நிமிடங்கள் தரித்து நின்று சேவையை வழங்குமாறு ஆளுனரால் நேற்றய தினம் உத்தரவிடப்பட்டிருந்தது.

அதற்கமைவாக இன்றிலிருந்து பேருந்துசேவைகள் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்று சேவைகளை மேற்கொள்ள உள்ளது.

அதன் ஆரம்பநிகழ்வு வர்தகர்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது நிகழ்வில் விருந்தினர்களால் நாடா வெட்டபட்டு பஸ்தரிப்பு நிலையம் திறந்து வைக்கபட்டதுடன் பேருந்து சேவைகளும் ஆரம்பித்து வைக்கபட்டது.

நிகழ்வில் நகரசபைதலைவர் இ.கௌதமன் மாவட்டஅரச அதிபர் எம்.கனீபா,பிரதேசசெயலர் கா.உதயராயா,நகரசபை செயலாளர் இ.தயாபரன்,உபநகரபிதா சு.குமாரசாமி,ஈழமக்கள் ஐனநாயககட்சியின் வவுனியா அமைப்பாளர் கு.திலீபன்,பொலிஸ் அத்தியட்சகர் எம்.தென்னகோன், வர்தகர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*