;
Athirady Tamil News

ஊரெழு இந்திரானை வீதி புனரமைப்பு – பா.கஜதீபன் ஆரம்பித்து வைத்தார்!!(படங்கள்)

0

தேர்தல் தொகுதிக்கு 100 மில்லியன் ரூபா எனும் திட்டத்தின் கீழ் கோப்பாய்த்தொகுதிக்குப்பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் சிபார்சின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஊரெழு இந்திரானை வீதியின் புனரமைப்புப் பணிகள் இன்று வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபனால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இன்று 07.12.2018 வெள்ளிக்கிழமை மாலை 04 மணியளவில் தமிழ்த்தேசியக்கூட்டமைபின் ஊரெழுப்பகுதியின் செயற்பாட்டாளர் முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் அவர்கள் கலந்துகொண்டு சமய நிகழ்வுகளை அடுத்து வீதியின் புனரமைப்புப்பணிகளை ஆரம்பித்து வைத்தார்

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருடன், வலி.கிழக்கு (கோப்பாய்) பிரதேசபைத்தலைவர் தி.நிரோஷ், வலி.கிழக்கு (கோப்பாய்) பிரதேசசபை உறுப்பினர்களான சி.அகீபன், வி.சசிகரன் ஆகியோரும், ஊரவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − eight =

*