;
Athirady Tamil News

சமுர்த்தி அலுவலர்களிற்கு வவுனியாவில் செயலமர்வு!!(படங்கள்)

0

வன்னிமாவட்டம் மற்றும்,கிளிநொச்சியைசேர்ந்த சமுர்திஅலுவலர்களிற்கான செயலமர்வும், பயிற்சியும் வவுனியாபிரதேசசெயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

சமுர்திதிணைக்களத்தின் வவுனியா மாவட்ட பணிப்பாளர் திருமதி.பத்மரஞ்சன் தலைமையில் நடைபெற்றநிகழ்வில் மாவட்டஅரச அதிபர் எம்.கனீபா,பிரதேசசெயலர் கா.உதயராயா, சமுர்திதலைமைபீட முகாமையாளர் திருமதி ச.சந்திரகுமார் எனபலரும் கலந்துகொண்டனர்.

சமுர்திதிணைக்களம் மற்றும் சமுர்திவங்கிகளின்; மூலம் மக்களிற்கு பயன்படக்கூடிய செயற்திட்டங்களை மேலும் விஸ்தரித்து,அவற்றில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கோடு குறித்த செயலமர்வுநடைபெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.

நிகழ்வில் வளவாளராக சமுர்திதலமைபீடத்தில் இருந்துவருகைதந்திருந்த அரியநாதன் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 9 =

*