;
Athirady Tamil News

ஜனாதிபதி கிளிநொச்சி சாந்திபுரம் கிராமத்திற்கு விஜயம்!!(படங்கள்)

0

புனரமைக்கப்பட்ட இரணைமடு குளத்தினை திறந்து வைப்பதற்காக கிளிநொச்சிக்கு வருகை தந்த மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் கிளிநொச்சி சாந்திபுரம் கிராமத்திற்கு விஜயம் செய்தார்.

வடமாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் சாந்திபுரம் கலைமகள் வித்தியால முன்றலில் அப்பகுதி மக்களை சந்தித்த ஜனாதிபதி மக்களின் குறைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

சாந்திபுரம் கிராமத்துக்கான வீதிகள் புனரமைக்கப்படவில்லை மீளக்குடியமர்ந்த மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் கிடைக்கவில்லை அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது வீதியால் செல்லும் பெண்களுக்கு போதையில் இளைஞர்கள் தொந்தரவு செய்வதாகவும் ஜனாதிபதியிடம் மக்கள் முறையிட்டனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி இக்கிராம மக்களுக்கு நல்லதொரு தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதி அளித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*