;
Athirady Tamil News

சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென முடிவெடுக்கப்பட்ட நாள்: 8-12-1991..!!

0

சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென ரஷ்யா, பெலாரஸ், உக்ரேன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி 1991-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி முடிவெடுத்தனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1953 – அணு அமைதிக்கே என்று அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார். * 1963 – மேரிலாதில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 81 பேர் கொல்லப்பட்டனர். * 1966 – கிரேக்கக் கப்பல் ஒன்று மத்திய தரைக் கடலில் உள்ள ஆயிஜியன் கடலில் மூழ்கியதில் 200 பேர் கொல்லப்பட்டனர். * 1969 – கிரேக்கத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 93 பேர் கொல்லப்பட்டனர். * 1972 – சிக்காகோவில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 45 பேர் கொல்லப்பட்டனர். * 1980 – பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த ஜான் லெனன் சுட்டுக் கொல்லப்பட்டார். * 1982 – சூரினாமில் ராணுவ ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் கொல்லப்பட்டனர்.

* 1985 – சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது. * 1987 – பெருவின் தலைநகர் லீமாவுக்கருகில் சென்று கொண்டிருந்த விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் அதில் பயணம் செய்த பெருவின் கால்பந்து அணியொன்றின் அனைத்து வீரர்களும் கொல்லப்பட்டனர். * 1991 – சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென ரஷ்யா, பெலாரஸ், உக்ரேன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர். * 1998 – அல்ஜீரியாவில் 81 பேர் ஆயுதக் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × one =

*