;
Athirady Tamil News

தடைசெய்யபட்ட களைநாசினியுடன் இருவர் கைது!!(படங்கள்)

0

தடைசெய்யப்பட்ட களைநாசினியை கடத்திசெல்லமுற்பட்ட இருவரை செட்டிகுளம் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

வடமாகாண சிரேஸ்டபொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்ணாண்டோவின் வழிகாட்டலில், வன்னிமாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் மேற்பார்வையில் பொலிஸ்அத்தியட்சகர் தென்னகோனின் நெறிப்படுத்தலில் செட்டிகுளம் பொலிஸ்நிலய குற்றபிரிவின் பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீரவின் தலைமையில் குறித்த கைதுநடவடிக்கை இடம்பெற்றது.

குறித்த சம்பவம்தொடர்பாக மேலும் தெரியவருகையில் இன்று காலை மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசுவாகனத்தை செட்டிகுளம் நகர்ப்பகுதியில் வழிமறித்த பொலிசார் அதில் சோதனைகளை மேற்கொண்டபோது தடைசெய்யபட்ட களைநாசினியை யூரியாபையில் கடத்திசெல்வது தெரியவந்தது.

குறித்த சொகுசுவானில் இருந்து 600 கிராம் அளவில் சிறுபைகளாக பொதிசெய்யபட்ட 6 ஆயிரம் கிலோ நிறையுடைய தடைசெய்யபட்ட கிளைபோசெட் மருந்துகளை பொலிசார் கைப்பற்றினர். அதன் மதிப்பு சுமார் 39 இலட்சம் என போலிசார் தெரிவித்தனர். வானில் பயணித்தவர்களை கைதுசெய்தபொலிசார் பயணித்த வாகனத்தையும் பொலிஸ்நிலையத்திற்கு எடுத்துசென்றனர்.

கைதுசெய்யபட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆயர்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 15 =

*