;
Athirady Tamil News

சாவகச்சேரி நகர இளைஞர் கழகத்தினால் நகரை அழகு படுத்தும் நோக்கில் மரநடுகைத்திட்டம்!!(படங்கள்)

0

சாவகச்சேரி நகர இளைஞர் கழகத்தினால் நகரை அழகு படுத்தும் நோக்கில் மரநடுகைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரியில் இடம்பெற்றது.

இதன்போது இராமலிங்கம் வீதி மற்றும் கென்ஸ்மன் வீதி ஆகிய இரண்டு வீதிகளின் இருமருங்கிலும் மரங்கள் நடப்பட்டு இளைஞர் கழகத்தினால் பராமரிக்கப்படவுள்ளது.

சாவகச்சேரி நகர இளைஞர் கழக தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் வருந்தினராக கலந்து கொண்டு மரநடுகை நிகழ்வினை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இம் மரநடுகை நிகழ்வில் சாவகச்சேரி நகராட்சி மன்ற உபதலைவர் அ.பாலமயூரன் முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் கிராம சேவகர் சுபாஸ்சந்திரபோஸ் இளைஞர் சேவைகள் அதிகாரி அனுதரன் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள் எனப்பெருந்திரளானோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டிவைத்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 18 =

*