;
Athirady Tamil News

சுன்னாகம் சிகைஒப்பனையாளர் சங்கக்கூட்டம்!!(படங்கள்)

0

சுன்னாகம் சிகைஒப்பனையாளர் சங்கக்கூட்டம் – முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மற்றும் தவிசாளர்கள் கலந்துகொண்டனர்
மட்டுப்படுத்தப்பட்ட சுன்னாகம் சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச்சங்கத்தின் 42ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம் இன்று 10.12.2018 திங்கட்கிழமை காலை 10 மணியளவில், சிகை ஒப்பனையாளர் சங்க யாழ்.மாவட்டத் தலைவர் உதயசங்கர் தலைமையில் மாவை .பாரதி மறுமலர்ச்சி மன்ற பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் வலி.வடக்கு (தெல்லிப்பழை) பிரதேசசபைத்தவிசாளர் சோ.சுகிர்தன், வலி.தெற்கு (சுன்னாகம்) பிரதேசசபைத்தவிசாளர் க.தர்ஷன் ஆகியோரும் விருந்தினர்களாகக்க்கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அங்கத்தவர்களிடையேயான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், அண்மையில் சாவகச்சேரி நகரசபையில் அரசியல் கட்சி உறுப்பினர் ஒருவரால் கொண்டுவரப்பட்ட சிகை அலங்கரிப்பாளர் சங்கத்துக்கும், சிகை அலங்கரிப்பாளர்களின் நலனுக்கும் எதிரான தீர்மானத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் அத்தீர்மானத்தை தடுத்து நிறுத்துவதாக வக்குறுதியளித்த சாவகச்சேரி நகரசபை தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், யாழ்.மாவட்டத்தில் இருக்கும் பிரதேச சபைகளின் தவிசாளர்களுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 4 =

*