;
Athirady Tamil News

சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை!!

0

சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விஷேட நிபுணர்கள் அடங்கிய சுயாதீன குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்று (10) மாலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பொருளியல் பேராசிரியர் தேசமணி டபிள்யு.டி.லக்ஷமன் அந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அதேவேளை திறந்த பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியர் சிரிமேவன் கொலம்பகே, களனி பல்கலைக்கழகத்தின் பொருளியல் சம்பந்தமான முன்னாள் பேராசிரியர் அஜிதா தென்னகோன், சுயாதீன ஆலோசகர் கலாநிதி சனத் ஜயநேத்தி மற்றும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் உதவி ஆளுநர் ஆர்.ஏ. ஜயதிஸ்ஸ ஆகியோர் அந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 2 =

*