;
Athirady Tamil News

அரிமரங்களுடன் மூன்றுபேர் கைதுசெய்யபட்டதாக பொலிசார் தெரிவிப்பு!! (படங்கள்)

0

சட்டவிரோதமான முறையில் அரிமரங்களை கடத்திச்சென்ற மூன்று பேரை கைதுசெய்துள்ளதாக ஈச்சங்குளம் போலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவித்த பொலிசார் இன்று காலை 7 மணியளவில் நொச்சிகுளம் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் கடத்தபடுவதாக கிடைத்த தகவலிற்கமைய அப்பகுதிக்கு சென்ற ஈச்சங்குளம் பொலிசார் , விசேட அதிரடிபடையினருடன் இணைந்து குறித்த மரக்கடத்தல் நடவடிக்கையை முறியடித்துள்ளதாக தெரிவித்தனர்

குறித்த சம்பவத்தில் வவுனியாவை சேர்ந்த மூன்று நபர்கள் கைதுசெய்யபட்டதுடன் கப் ரக வாகனம் ஒன்றும் பொலிசாரால் மீட்கபட்டது.

கைதுசெய்யபட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நாளையதினம் நீதி மன்றில் ஆயர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 13 =

*