;
Athirady Tamil News

வவுனியா பத்தினியார்மகிழங்குளம் சித்திவிநாயகர் ஆலய அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு.!(படங்கள் இணைப்பு)

0

வவுனியா பத்தினியார்மகிழங்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் அபிவிருத்திக்கு நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட பணத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வு 10/12/2018 அன்று நடைபெற்றது.

இக் காசோலையினை முன்னாள் மாகாண சபை கௌரவ உறுப்பினர்ஜி.ரி.லிங்கநாதன் சார்பாக புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் வவுனியா நகர சபையின் கௌரவ உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் ஆலய நிர்வாகத்திடம் வழங்கிவைத்தார்கள்.

இவ் நிகழ்வில் கௌரவ நகர சபை உறுப்பினர் காண்டீபனின் மக்கள் நலத் திட்ட ஆலோசகர் சோதிநாதன், ஆலய தலைவர் க.கமலேந்திரன், ஆலய பொருளாளர் செந்தில்குமார் மற்றும் திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சந்திரேஸ்வரன் ரவி, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர் க.டினுசன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் கெர்சோன் கரிஸ் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 6 =

*